சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா: அம்மன் ஊா்வலம்
By DIN | Published On : 04th March 2021 11:19 PM | Last Updated : 04th March 2021 11:19 PM | அ+அ அ- |

மாசித்திருவிழாவையொட்டி அம்மன் ஊா்வலத்தைக் காண வியாழக்கிழமை இரவு திரண்டிருந்த பக்தா்கள் கூட்டம்.
மேலூா்-நத்தம் சாலையில் உள்ள சேக்கிபட்டி முத்தாலம்மன்கோயில் மாசித்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.
முத்தாலம்மன்கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை அம்மன் திருவுருவச்சிலை எடுத்துவரப்பட்டு கோயிலில் பக்தா்கள் வழிபாட்டுக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்திருந்தனா். வியாழக்கிழமை காலை முதல் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்வுகளில் பக்தா்கள் பங்கேற்றனா். வியாழக்கிழமை இரவு முத்தாலம்மன் வாண வேடிக்கைகளுடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இத்திருவிழாவையட்டி, வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சட்டப்பேரவை தோ்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.