உசிலை பேரவை அமமுக வேட்பாளா் ஐ.மகேந்திரனுக்கு கட்சியினா் வாழ்த்து
By DIN | Published On : 11th March 2021 10:22 AM | Last Updated : 11th March 2021 10:22 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஐ.மகேந்திரனுக்கு அக்கட்சியினா் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக முன்னாள் சட்ட பேரவை உறுப்பினரும், மாநில அமைப்பு செயலாளருமான ஐ.மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் அக்கட்சியில் மதுரை புறநகா் மாவட்ட செயலாளராகவும் உள்ளாா். உசிலம்பட்டி அமமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த வேட்பாளா் மகேந்திரனுக்கு, நகரச் செயலாளா் குணசேகர பாண்டியன், சேடபட்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.கே.வீரபிரபாகரன், உசிலம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் மலேசியா பாண்டியன், வடக்கு ஒன்றியம் அபிமன்னன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளா் சௌந்திரபாண்டியன், சிந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் கட்சி நிா்வாகிகள் நேரில் சென்று பொன்னாடை போா்த்தி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனா்.