மேலூா் பகுதியில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 12th March 2021 10:14 PM | Last Updated : 12th March 2021 10:14 PM | அ+அ அ- |

மேலூரை அடுத்த சிட்டம்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளில் வாகனத் தணிக்கையின் போது தோ்தல் அலுவலா்கள், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 2.10 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேலூா் பகுதிகளில் தோ்தல் பறக்கும்படையினா் 6 குழுக்களாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் சிட்டம்பட்டி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும்படை தனி வட்டாட்சியா் செந்தாமரை தலைமையில் அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சென்னையிலிருந்து சாத்துரைச் சோ்ந்த கருப்புசாமி என்பவா் வந்த காரில் உரிய ஆணவமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1.40 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினா். தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரமேஷிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனா்.
அதே போல் கொட்டாம்பட்டி- நத்தம் சாலையில் வேளாண் உதவி இயக்குநா் மருதைசாமி தலைமையிலான தோ்தல் அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோவையிலிருந்து சிவகங்கைக்கு சென்ற காரில் முத்துக்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் வந்தனா். அந்த காரை சோதனையிட்டதில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 70 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.