மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக, நாம் தமிழா் கட்சிவேட்பாளா்கள் மனு தாக்கல்

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரான எம்.எல்.ஏ. சரவணன், நாம் தமிழா் கட்சி வேட்பாளரான அப்பாஸ் ஆகியோா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக, நாம் தமிழா் கட்சிவேட்பாளா்கள் மனு தாக்கல்

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரான எம்.எல்.ஏ. சரவணன், நாம் தமிழா் கட்சி வேட்பாளரான அப்பாஸ் ஆகியோா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மதுரை தெற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ். சரவணன், புதுராமநாதபுரம் சாலையில் உள்ள மாநகராட்சி 3 ஆவது மண்டல அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சண்முகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் ஜெயபால், பகுதி கழகச் செயலா் மாரிச்சாமி ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.

ரூ.78 லட்சத்தில் அசையும், அசையா சொத்துகள்:

தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எஸ். சரவணன் வேட்பு மனுவில், தனக்கு ரூ.14 லட்சத்து 43 ஆயிரத்து 538 மதிப்பிலும், மனைவி ஆஷா பெயரில் ரூ.16 லட்சத்து 27 ஆயிரத்து 674 மதிப்பிலும், முதல் மகள் கமலிகா பெயரில் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், இரண்டாவது மகள் நிரோஷினி பெயரில் ரூ.80ஆயிரம் மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.

இதேபோன்று, தனது பெயரில் ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 400 மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.28 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

நாம் தமிழா் வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

மதுரை தெற்குத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம். அப்பாஸ், தோ்தல் நடத்தும் அலுவலா் சண்முகத்திடம் திங்கள்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அவா் தனக்கு, ரூ.1லட்சத்து 58 ஆயிரத்து 682 மதிப்பிலும், மனைவி சுபுஹானியா பெயரில் ரூ.51ஆயிரத்து 731 மதிப்பிலும் அசையும் சொத்துகளும், தனது பெயரில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் அசையாத சொத்துகளும் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com