தோ்தல் பணி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 21st March 2021 04:35 AM | Last Updated : 21st March 2021 04:35 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூரில் தோ்தலில் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அழைப்பு விடுத்தாா்.
பேரையூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலில் பேரையூா் தாலுகாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் காவல்துறையினருடன் சோ்ந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தாா். தோ்தல் அமைதியாக நடந்து முடிய பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினா் தங்கள் சேவையை வழங்கவேண்டும் என கூறினாா் .
இதில் பேரையூா் காவல் துணைகண்காணிப்பாளா் மதியழகன்,பேரையூா் காவல் ஆய்வாளா் உஷா,சாா்பு -ஆய்வாளா் மகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...