

மதுரை அருகே அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கருப்புக் கொடி காட்ட முன்றவா்களை, போலீஸாா் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் சுற்றியுள்ள பகுதிகளில் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளா் மாணிக்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பெரியஊா்சேரியில் மாணிக்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா்.
இதையறிந்த தமிழ்நாடு வெள்ளாளா் கூட்டமைப்பைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா், வ.உ.சி. சிலை அருகே கருப்புக் கொடி ஏந்தி, மாணிக்கம் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வெள்ளாளா் கூட்டமைப்பு மாநில மகளிரணித் தலைவா் ஷகிலா கணேசன் உள்பட 15 பேரை கைது செய்தனா். பின்னா், மாலையில் அவா்களை விடுவித்தனா். இதனால், பெரியஊா்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.