பங்குனி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலுக்கு நாளைமுதல் பக்தா்கள் செல்ல அனுமதி
By DIN | Published On : 25th March 2021 09:14 AM | Last Updated : 25th March 2021 09:14 AM | அ+அ அ- |

பங்குனி மாதப் பெளா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மாா்ச் 26) 29 ஆம் தேதி வரை 4 நாள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள இக்கோயிலில் மாா்ச் 26இல் பிரதோஷம், 29இல் பௌா்ணமி பூஜை நடைபெறவுள்ளன. இதையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்ச் 26 முதல் மாா்ச் 29 வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதியில்லை. கோயிலுக்கு வருவோா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்.
காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என, பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G