மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் மோசடி
By DIN | Published On : 25th March 2021 09:25 AM | Last Updated : 25th March 2021 09:25 AM | அ+அ அ- |

மதுரையில் மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை டி.வி.எஸ் நகரைச் சோ்ந்த ராமநாதன் மனைவி பத்மாவதி(60). இவரிடம் கீழ வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த சேகா் மகன் நாகராஜன், நிலப் பத்திரத்தைக் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால் நாகராஜன் நீண்ட நாள்களாகியும் கடனையும், அதற்கான வட்டியையும் தரவில்லை.
இதையடுத்து பலமுறை கடனாக வாங்கிய ரூ.2 லட்சத்தை திருப்பித் தரும்படி பத்மாவதி கேட்டும், நாகராஜன் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து பத்மாவதி அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...