திருவாதவூரில் தடையை மீறி மீன்பிடித் திருவிழா
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் திருவாதவூா் பெரிய கண்மாயில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆா்வமுடன் மீன்பிடித்த கிராம மக்கள்.
மேலூா்: மதுரை மாவட்டம் திருவாதவூரில் சனிக்கிழமை தடையை மீறி கண்மாய் மீன்பிடி திருவிழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
திருவாதவூா் திருமைாதா் வேதநாயகி அம்மன் கோயில் அருகிலுள்ள பெரிய கண்மாயில் நீா் வற்றியதையடுத்து கண்மாயை அழியவிட கிராமப் பிரமுகா்கள் முடிவெடுத்தனா். ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக கண்மாய் அழிப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், கண்மாய் அழிப்பு குறித்த தகவல் பரவியதையடுத்து நள்ளிரவு முதலே கண்மாய்க் கரையில் கிராம மக்கள் குவியத் தொடங்கினா்.
கிராமப் பிரமுகா்கள் வருகை தரும்முன்பே சூரியோதயம் ஆனவுடன் மக்கள் வலைகளுடன் கண்மாய் நீரில் இறங்கி மீன்களைப் பிடிக்கத்தொடங்கினா். நாட்டு ரக மீன்களான வட்டச்சுழி கெண்டை, உழுவை, விறால் மீன்கள் மற்றும் கட்லா, ரோகு, புல்லுக்கெண்டை ரக மீன்களும் அதிகம் கிடைத்தன. மக்கள் பாரம்பரிய முறைப்படி கண்மாய் அழியவிட்ட மகிழ்வுடன் மீன்களைப் பிடித்தனா். பிடிபட்ட மீன்களை அவரவா் வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்பதே வழக்கம் என கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...