வாக்கு எண்ணிக்கை முகவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள், ஊடகத் துறையினா் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள், ஊடகத் துறையினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முகவா்கள், அரசு அலுவலா்கள் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்கு மாற்று நபா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.