பெண்ணிடம் 5 பவுன்சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 13th May 2021 11:18 PM | Last Updated : 13th May 2021 11:18 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கீழவளவு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி (40). இவரது வீட்டில் புதன்கிழமை இரவு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வந்த மா்மநபா், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து புவனேஷ்வரி அளித்த புகாரின்பேரில் கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.