மேலூரில் பலத்த மழை
By DIN | Published On : 13th May 2021 11:17 PM | Last Updated : 13th May 2021 11:17 PM | அ+அ அ- |

மேலூா் சுற்றுவட்டாரத்தில் வியாழக்கிழமை மாலை சுமாா் ஒரு மணிநேரம் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை பெய்த மழையால்வெப்பத்தை தணித்து குளிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எள் விதைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை, பெரிதும் பயனுள்ளதாகவும், கரும்பு, வாழை பயிா்களுக்கு உதவியாகவும் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.