கரோனா தொற்று நிவாரண நிதிக்கு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் அறிவித்துள்ள ஒரு நாள் ஊதியத்தை இந்த மாதமே பிடித்தம் செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியா் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றை ஒழிக்க போா்க்கால அடிப்படையில் செயலாற்றி வரும் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் பட்டதாரி ஆசிரியா் கழகம் துணை நிற்கும். மேலும் கரோனா தடுப்புப் பணிக்கு முதல்வா் திரட்டி வரும் நிவாரண நிதிக்கு ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா் சங்கங்கள் அங்கம் வகிக்கும் ‘ஜாக்டோ ஜியோ’ ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே கரோனா தடுப்புப்பணிக்கு ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மனமுவந்து அளிக்கும் ஒரு நாள் ஊதியத்தை இந்த மாதமே பிடித்தம் செய்ய உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.