பேரையூரில் முககவசம் அணியாத 47 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 16th May 2021 12:59 AM | Last Updated : 16th May 2021 12:59 AM | அ+அ அ- |

பேரையூா் பகுதியில் சனிக்கிழமை முகக் கவசம் அணியாத 47 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
பேரையூா் பகுதியில் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 47 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா். இதேபோல் தலைக்கவசம் மற்றும் முகக் கவசம் அணியாத 127 போ் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.