திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

ஸ்ரீ முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனப் பெருமை பெற்றது திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில். இக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதேபோல சண்முகர் சன்னதி உள்ள சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சண்முக அர்ச்சனை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெறும். விழாவினை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் ஆஸ்தான மண்டபத்தில் காலையிலும், மாலையிலும் தினமும் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8ஆம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 9ஆம் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெறும்.விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெறும்.தற்போது கரோனா தொற்று உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் கோயிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.மேலும் பக்தர்கள் விரத நாட்களில் கூட்டமாக கிரிவலம் செல்லவும் தடை விதித்துள்ளது.மேலும் கோயிலில் விழாக்கள் நடைபெறும்போது பக்தர்கள் உபயதாரர்கள் மற்றும் கட்டளை தாரர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com