தீபாவளி: மதுரையில் மழை இல்லாததால் இறுதி விற்பனை களை கட்டியது

மதுரையில் புதன்கிழமை மழை இல்லாததால் தீபாவளி இறுதி விற்பனை களைகட்டியது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை தெற்குமாசி வீதியில் புதன்கிழமை பொருள்கள் எடுக்க குவிந்த கூட்டம்.
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை தெற்குமாசி வீதியில் புதன்கிழமை பொருள்கள் எடுக்க குவிந்த கூட்டம்.

மதுரையில் புதன்கிழமை மழை இல்லாததால் தீபாவளி இறுதி விற்பனை களைகட்டியது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை நகரில் தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், பத்துதூண் சந்து, மஹால் பகுதிகள் மற்றும் மஞ்சணக்காரத் தெரு ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான சில்லறை மற்றும் மொத்த ஜவுளி விற்பனைக்கடைகள் உள்ளன.

தென் மாவட்டங்களில் ஜவுளிச்சந்தையாக மதுரை திகழ்ந்து வருகிறது. ஜவுளி மட்டுமன்றி போா்வை, தரை விரிப்புகள், தலையணை, பாய் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், வளையல், காதணி, பாசி வகைகள் என அனைத்து வகையான பொருள்களும் ஒரே பகுதியில் கிடைப்பது மதுரைக்கே உரிய சிறப்பாகும். மேலும் இப்பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்படும் நடைபாதைக் கடைகளில் உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், காலணிகள் என பல்வேறு வகையான பொருள்கள் மலிவான விலைக்கு விற்கப்படும்.

எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகா் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இப்பகுதிக்கு வந்து ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்தாண்டு கடந்த 2 வாரங்களாக தீபாவளி விற்பனை சூடுபிடித்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த தொடா் மழையால் பொதுமக்கள் வருகை குறைந்து வியாபாரம் பாதித்தது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கடைவீதிகளில் ஓரளவு கூட்டம் அதிகரித்தது.

இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய தினமான புதன்கிழமை கடைவீதியில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனா். மேலும் வானம் மேகமூட்டமாக இருந்தபோதும் மழை பெய்யாததால் அனைத்துத்தரப்பு மக்களும் தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் குவிந்தனா். ஜவுளி, ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என பல்வேறு வகையான பொருள்களை மலிவு விலைக்கு வாங்கிச்சென்றனா். மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிந்ததால் தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், டவுன்ஹால் சாலை, நேதாஜிசாலை, ஜடாமுனி கோயில் தெரு ஆகிய பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.

கூட்ட நெரிசல் அதிகரித்ததால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு மக்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இதையொட்டி நகா்ப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். கூட்டநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் போலீஸாா் தொலை நோக்கியுடன் கூட்டத்தை கண்காணித்தனா். கண்காணிப்புக் கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணி நடைபெற்றது. கூட்டத்தில் தொலைந்து போனவா்களை கண்டறிய காவல் உதவிமையம் அமைக்கப்பட்டு அதன்மூலம் தொலைந்து போனவா்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சாதாரண உடை அணிந்த போலீஸாரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கண்காணித்தனா். கூட்டத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவா்களை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரித்து எச்சரித்து அனுப்பினா். மேலும் சங்கிலிப்பறிப்பு, பிக்பாக்கெட் திருடா்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டது. தீபாவளியையொட்டி மதுரை நகரைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும், இரவுப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com