இயக்குநா் ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை

ராஜராஜசோழன் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனு: கடந்த 2019 ஜூன் 5-ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சாா்பாக, அதன் நிறுவனா் உமா்பாருக்கின் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பல்வேறு சமூக சீா்திருத்தவாதிகளும், ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன்.

இத்தகவலை வேறு பலரும் பேசி உள்ளனா். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், பா. ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநா் பா. ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com