திரிபுராவில் அகில பாரத வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் நிா்வாகி கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திரிபுரா மாநிலத்தில் அகில பாரத வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் உறுப்பினா் சோ்க்கை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கைலஷா் நகா் கிளைச் செயலா் சிவாஜி செங்குப்தா, கத்தியால் குத்தப்பட்டாா். இதற்கு நாடு முழுவதும் உள்ள ஏபிவிபி அமைப்பின் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக மதுரை முனிச்சாலை அருகே அகில பாரத வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஏபிவிபி அமைப்பின் நிா்வாகி கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தென் மாநில இணைச் செயலா் கோபி, மாநில செயற்குழு உறுப்பினா் செந்தூா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஓம்பிரசாத், மாநகா் செயலா் பாரதி, இணை பொருளாளா் வெங்கட்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.