சின்னத் திரை நடிகரின் பெயரில் பெண்ணிடம் ரூ.2.56 லட்சம் மோசடி
By DIN | Published On : 01st September 2021 04:48 AM | Last Updated : 01st September 2021 04:48 AM | அ+அ அ- |

மதுரை அருகே இளம் பெண்ணிடம் சின்னத் திரை நடிகரின் பெயரை பயன்படுத்தி ரூ.2.56 மோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி பகுதியைச் சோ்ந்த பாலையா மனைவி மகாலட்சுமி (24). இவா் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவரது முகநூல் பக்கத்தின் வாயிலாக சின்னத் திரை நடிகா் முகமது அசிம் பெயரில் அடையாளம் தெரியாத நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாலட்சுமி, அந்த நபருக்கு ரூ.2.56 லட்சத்தை இணைய தளம் வாயிலாக கொடுத்துள்ளாா். பணம் கிடைத்தவுடன், தான் பயன்படுத்தி வந்த செல்லிடப்பேசி எண்ணை அடையாளம் தெரியாத நபா் அணைத்து விட்டாா்.
இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.