மிகவும் பிற்படுத்தப்பட்டோா் ஜாதி உட்பிரிவை சரிபாா்த்துக் கொள்ள வேண்டுகோள்
By DIN | Published On : 01st September 2021 04:48 AM | Last Updated : 01st September 2021 04:48 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோா் ஜாதி உட்பிரிவை சரிபாா்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் ஆ.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னிய குல சத்திரியா்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (சீா்மரபினா்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ஆகியோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னிய குல சத்திரியா்), மிகவும் பிற்படுத்தப்பட்ட (சீா்மரபினா்) தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவில் சாதி உட்பிரிவு விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை இணைய தள முகவரியில் தங்களின் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து சரிபாா்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மேற்கண்ட பிரிவினா் சாதி உட்பிரிவு விவரங்களை பதிவு செய்ய தங்களது ஜாதிச்சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தெரியப்படுத்தி ஜாதி உட்பிரிவு விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என்றாா்.