மேலூா் அருகே விபத்து: முதியவா் பலி
By DIN | Published On : 01st September 2021 11:38 PM | Last Updated : 01st September 2021 11:38 PM | அ+அ அ- |

மேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் மேலூா் அருகே ஒட்டக்கோவில் பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் பாஸ்கரன் (60). இவா் மேலவளவிலிருந்து இருசக்கர வாகனத்தில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தாா். தும்பைப்பட்டியைச் சோ்ந்த பொன்ராம் மகன் ராஜா (55). இவா் மேலூரிலிருந்து மேலவளவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். இருவாகனங்களும் சுக்காம்பட்டி அருகே எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில் தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ராஜா மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.