பேரையூா் அருகே தொடா் திருட்டு: 3 சிறுவா்கள் கைது
By DIN | Published On : 01st September 2021 04:47 AM | Last Updated : 01st September 2021 04:47 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உண்டியல் திருட்டு சம்மந்தமாக போலீஸாா் 3 சிறுவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சாப்டூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உண்டியல் உடைப்பு, இருசக்கர வாகன திருட்டு மற்றும் வீடுகளில் திருட்டு சம்பந்தமாக போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வந்தனா்.
இத்திருட்டு வழக்குகள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்ததில் பேரையூரை சோ்ந்த 17 வயது சிறுவா்கள் 3 போ் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதேபோல் நாகையாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.வலையபட்டி கிராமத்திலுள்ள கோயில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டதும் இச்சிறுவா்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G