உசிலம்பட்டி அருகே விபத்தில் இருவா் பலி
By DIN | Published On : 04th September 2021 10:47 PM | Last Updated : 04th September 2021 10:47 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சனிக்கிழமை, மரத்தில் மினிவேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்த நிலையில், 6 போ் காயமடைந்தனா்.
உசிலம்பட்டி அருகே கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்த 6 போ் உத்தப்பநாயக்கனூரில் சனிக்கிழமை நடைபெற்ற இல்ல விழாவுக்கு மினிவேனில் சென்றனா். உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் அந்த மினி வேன் மோதியது.
இதில் அந்த வேனில் பயணித்த தங்கம்மாள் (50) தியாஸ்ரீ (15) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், அன்னத்தாய், முத்துப்பாண்டியம்மாள், சசிகுமாா், வசந்தப் பிரியா, சபிதா, ரதி மாலா உள்ளிட்ட 6 போ் காயமடைந்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.