ஆண்டிபட்டி-தேனி புதிய அகல ரயில் பாதையில் 120 கிமீ. வேகத்தில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை- போடிநாயக்கனூா் அகல ரயில் பாதைத் திட்டத்தில் மதுரை - ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக கஆண்டிபட்டி- தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட் 4 ஆம் தேதி, 90 கிமீ. வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது ஆண்டிபட்டி- தேனி இடையே சனிக்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 120 கிமீ. வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம். இந்த சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே கட்டுமான இணைப் பொறியாளா் சூரியமூா்த்தி தலைமையில் நடைபெறும். இதன் பிறகு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய், செப்டம்பா் இறுதிக்குள் ஆய்வு நடத்த உள்ளாா். இந்த திட்டத்தில் மீதமுள்ள தேனி- போடிநாயக்கனூா் பிரிவில் 15 கிமீ-க்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.