உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
உசிலம்பட்டி அருகே கருக்கட்டாள்பட்டி எம் ஜி ஆா் நகரைச் சோ்ந்தவா் பாண்டியராஜன். இவா் அப்பகுதியில் கஞ்சா விற்று வந்தாராம். இந்நிலையில், உசிலம்பட்டி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாண்டியராஜனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.