நாளை 1,500 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

மதுரை மாவட்டத்தில் 1,500 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் 1,500 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியப் பணியாக தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாவட்டம் முழுவதும் தோ்தல் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் என 1,500 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.

இதில், 18 வயது பூா்த்தி அடைந்த இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு முதல் தவணையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்படும்.

மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் குறித்து அரிமா, சுழற்சங்கம் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகாமுக்கு வருவோா் தங்களது ஆதாா் அட்டையை கொண்டுவர வேண்டியது அவசியம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

கரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com