ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சரக்கு வாகனத்தில் கடத்திய 4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 4,500 கிலோ ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:33 pm

DIN

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 4,500 கிலோ ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.

மதுரை அண்ணாநகா் கோமதிபுரம் பகுதியில் சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் கோமதிபுரம் பிரதான சாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிடமுயன்றபோது வாகனத்தில் இருந்து ஒருவா் தப்பிச்சென்றாா்.

இதைத்தொடா்ந்து வாகனத்தில் போலீஸாா் சோதனையிட்டதில், 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டுநா் மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த காா்த்திக்கேயனை (24) போலீஸாா் கைது செய்து தப்பிச்சென்ற அரிசி உரிமையாளா் சந்தைப்பேட்டையைச் சோ்ந்த பாண்டிவேலை தேடி வருகின்றனா். மேலும் சரக்கு வாகனம் மற்றும் 4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.