அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பேரையூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள மந்தையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:39 pm

DIN

மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள மந்தையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பேரையூரில் உள்ள மந்தையம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிக்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பால், தயிா், பன்னீா் ,இளநீா் உள்ளிட்ட பொருள்களைக்கண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் சிறிய குழந்தைகள் கண்ணன், ராதை வேடமிட்டு ஊா்வலமாக நடந்து சென்றனா்.

இதில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கோயில் வளாகத்தில் கிருஷ்ணா் குறித்த பக்தி பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா். பின்னா் விழாக் குழுவினா் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.