பாதியாகக் குறைந்தது மதுரை மல்லிகைப் பூ விலை

நேற்று வரை ரூ.3,500 வரை விற்பனையான மதுரை மல்லிகைப் பூ இன்று கிலோ 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மலர் சந்தையில் பாதியாகக் குறைந்த மதுரை மல்லிகைப் பூ விலை
மலர் சந்தையில் பாதியாகக் குறைந்த மதுரை மல்லிகைப் பூ விலை

மதுரை: மதுரை மலர் சந்தையில் இன்று பாதியாக குறைந்தது மதுரை மல்லிகைப் பூவின் விலை. நேற்று வரை ரூ.3,500 வரை விற்பனையான மல்லிகைப் பூ இன்று கிலோ 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முகூர்த்த நாள்கள் மற்றும் விசேஷ நாள்கள் காரணமாக மதுரையில் கடந்த சில நாள்களாக பூக்களின் விலை உச்சத்தை தொட்டது.

ரூ.2000 முதல் ரூ.3,500 வரை விற்பனையான மல்லிகைப் பூ 1,000 ரூபாயாக குறைந்தது. இதர பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

பூக்களின் விலை நிலவரம்
மதுரை மல்லிகை - ரூ.1000 - ரூ.1500
முல்லை- ரூ.1000
பிச்சிபூ - ரூ.1000
செவ்வந்தி - ரூ.120
கனகாம்பரம் - ரூ.1500
 டிங்டாங்ரோஸ் - ரூ.200
சம்மங்கி- ரூ.70
அரளி -ரூ.200
துளசி-ரூ.30
செண்டு மல்லி- ரூ.30
கோழிக்கொண்டை-ரூ.30

நேற்று வரை  3000-3500 ரூபாய்க்கு விற்பனையாகிய மதுரை மல்லிகை பூவின் விலை இன்று பாதியாக குறைந்துள்ளதால் மலர் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com