கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

வாகன சோதனையின்போது, ஒரு வாகனத்துக்குள் இருந்த கூடுதல் டயரில் ரூ.93 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்
கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்
Published on
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, ஒரு வாகனத்துக்குள் இருந்த கூடுதல் டயரில் ரூ.93 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் நடந்த வாகனச் சோதனையின்போது, ஒரு காரை சோதனை செய்த போது, அந்த காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்து அதனை சோதித்த போது, அதற்குள் ரூ.93,93,000 பணம் இருந்தது கண்டுபிக்கப்பட்டது.

அந்த வாகனம் பிகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டயரை காவல்துறையினர் துண்டித்துப் பார்த்த போது அதில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக போலீஸார் கூறுகிறார்கள்.

இந்த பணம் எப்படி வந்தது என்று ஐந்து பேரும் தெரிவிக்கவில்லை என்று தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிகாரிலிருந்து அசாமுக்கு காரில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து நடத்தப்பட்ட வாகன சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணம் இருந்ததால், வங்கியின் உதவியோடு பணம் எண்ணப்பட்டது. அப்போதுதான் அதில் 93 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டபோது, எல்லா பணமும் பாஜகவிடமிருந்துதான் வருகிறது. தற்போது அதிகபட்சமாக பணம் குண்டர்களுக்கும் துப்பாக்கிகளுக்குமே ஆகிறது. அவர்கள் மத்தியப் படை பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கூட விசாரிக்க முடியாது. இவற்றையெல்லம் பார்த்துக் கொள்ளுமாறு பாஜக தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் அரசியல் ரீதியாக போராடுவோம், வன்முறை வழியில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com