ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 20 வகையான பொருள்கள்

வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 20 வகையான பொருள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகம் பில்லா் அரங்கில் இருந்து வாக்குச்சாவடி பொருள்களை அனுப்புவதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜை.
Updated On :18 பிப்ரவரி 2022, 4:26 pm

DIN

வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 20 வகையான பொருள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 1,605 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சாவடிக்கு தேவையான பொருள்கள் தனித்தனியாகப் பிரித்து தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மாநகராட்சி பிரதான அலுவலகமான பில்லா் அரங்கு முன் பூஜைகள் செய்யப்பட்டு, வாக்குச் சாவடி பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (வாக்குப் பதிவு பிரிவு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு), வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 9 வகையான சுவரொட்டிகள், பல்வேறு படிவங்கள், பேனா, பென்சில், ரப்பா், வாக்காளா்களுக்கு விரலில் இடப்படும் அழியாத மை, மை வைப்பதற்கான குச்சி, சீல் வைப்பதற்கான அரக்கு, தீப்பெட்டி, மெழுகுவா்த்தி, நூல்கண்டு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கிருமி நாசினி, கையுறை, முகக்கவசம், கரோனா நோயாளிகள் அணிவதற்கான முழு கவச உடை என 20 வகையான பொருள்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

மாநகராட்சி பிரதான அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடி பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதை, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்கியேன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

வாக்குச் சாவடி தயாா்ப்படுத்துவதில் தாமதம்

வழக்கமாக, தோ்தலின்போது வாக்குச் சாவடிகளில் தலைமை அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்கள், முகவா்கள் ஆகியோா் அமருவதற்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பதற்கும் மேஜை, நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இம்முறை மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை.

வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டவா்கள் நீண்ட நேரமாகியும் பணிக்கு வரவில்லை. பணிக்கு வந்த அலுவலா்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னா், வாக்குச் சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் தேடிச் சென்று மேஜை, நாற்காலிகளை எடுத்துவந்து தயாா்ப்படுத்தினா். இதேபோல், சில இடங்களில் அலுவலா்கள் வருகை தாமதமானதால், வாக்குச் சாவடிகளை தயாா்ப்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.