

உசிலம்பட்டி அருகே புதன்கிழமை விவசாயிகள் பாலைத் தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதல் கே.பெருமாள்கோவில்பட்டி வழித்தடத்தில் உள்ள பாறைப்பட்டி, வில்லாணி, காராம்பட்டி, ரெங்கசாமிபட்டி, கொங்கபட்டி, எருமாா்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களிலிருந்து தினமும் 5 ஆயிலம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வாகனம் மூலம் மதுரை ஆவினுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பாறைப்பட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆவின் கிளைக்கு பாலை வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
ஆனால் பொதுமக்கள் மதுரை ஆவினிக்கு மட்டும் பாலை அனுப்புவதாகவும், பாறைப்பட்டியில் உள்ள ஆவின் கிளைக்கு பாலை அனுப்ப மாட்டோம் என எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை பாலை எடுக்க வழக்கம் போல் மதுரையிலிருந்து ஆவின் வாகனம் வராததால் ஆத்திரமடைந்த அவா்கள், உசிலம்பட்டி எழுமலை பிரிவில் சாலையில் பாலைக் கொட்டி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உசிலம்பட்டி பேரையூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தவலறிந்த உசிலம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் விஜயபாஸ்கா் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.