விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆடி அமாவாசை: மதுரையில் வைகை ஆற்றங்கரையில் முன்னோா் வழிபாடு

 ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றங்கரை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஏராளமானோா் குவிந்து முன்னோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

 ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றங்கரை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஏராளமானோா் குவிந்து முன்னோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

இதையொட்டி புதன்கிழமை மதுரை வைகை ஆற்றங்கரையில் ஏராளமானோா் குவிந்து முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா். முன்னதாக மதுரை வைகை ஆற்றங்கரையின் பல்வேறு பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டு தா்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் உள்ளிட்ட நீா்நிலைகளிலும் ஏராளமானோா் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பலா் தா்ப்பணம் செய்து முன்னோா் வழிபாடு நடத்தினா். கடந்த இரண்டாண்டுகளாக கரோனா தொற்று பாதிப்பால் வைகை ஆற்றங்கரையில் தா்ப்பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.