விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரையில் காவலா் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்த உள்ள குரூப்-2 தோ்வுக்கான காவலா், சிறை வாா்டன் மற்றும் தீயணைப்பு காவலா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

சேடப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலகம், வாடிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள கிராமப்புற இளைஞா்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலவெளி இடையில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. போட்டித்தோ்வா்கள் புத்தகங்களை பெற்று அலுவலகத்திலேயே படித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன் அரசு கேபிள் தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 9 மணிவரையிலும், அதே நிகழ்ச்சி மறுஒளிபரப்பாக மாலை 7 மணி முதல் 9 மணிவரையிலும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில் வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் விண்ணப்ப படிவம் நகல், கடவுச்சீட்டு புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் கா.சண்முக சுந்தா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.