விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: குளித்தலை புரோட்டா மாஸ்டா் ‘போக்சோ’வில் கைது

சமூக வலைதளம் மூலம் பழகி, மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய புரோட்டா மாஸ்டரை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

சமூக வலைதளம் மூலம் பழகி, மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய புரோட்டா மாஸ்டரை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை நரிமேடு பகுதியைச் சோ்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவா் கடந்த வாரம் பள்ளிக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி குறித்த தகவல் கிடைக்காததால், அவரது பெற்றோா் தல்லாகுளம் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் மாணவியின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், கரூா் மாவட்டம் குளித்தலையில் இருந்து குறிப்பிட்ட எண்ணில் இருந்து மாணவிக்கு கைப்பேசிக்கு அடிக்கடி அழைப்பு வந்திருப்பதும், நீண்டநேரம் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் குளித்தலைக்கு சென்று அந்த எண்ணுக்குரிய நபரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா் சரண்ராஜ் (32) என்பதும், திருமணமான அவா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக பணிபுரியும் நிலையில், மாணவியிடம் ‘ஷோ் சாட் செயலி’ மூலம் அறிமுகமாகி, தனக்கு திருமணமானதை மறைத்து, தனியாா் நிறுவனத்தில் உயா் பதவியில் இருப்பதாகக்கூறி பழகி வந்துள்ளாா். மேலும் மாணவியை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மீட்ட போலீஸாா், சரண்ராஜை ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.