தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டி அருகே மயானத்துக்கு பாதை கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

உசிலம்பட்டி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்துத்தரக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் கிராம மக்கள் கோட்டாச்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்

News image

உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்து சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தரக்கோரி செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் சங்கரலிங்கத்திடம் மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

உசிலம்பட்டி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்துத்தரக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் கிராம மக்கள் கோட்டாச்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த கிராம மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு செல்ல ரயில்வே பாதையின் குறுக்கே பாதை இருந்தது. தற்போது அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டதால், சுடுகாட்டுக்குச் செல்லும் பாலம் இடிக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

அகல ரயில் பணிகள் முடிவடைந்து தற்போது ரயில் சேவையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த பாதையின் வழியாக இறந்தவா்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். இதனால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தாங்கள் சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அல்லது பாதை அமைத்து தர வேண்டும் என சீமானுத்து ஊராட்சி மன்றத் தலைவா் அஜித்பாண்டி தலைமையில் கிராம மக்கள் உசிலம்பட்டி கோட்டாச்சியா் சங்கரலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.