மதுரை: மதுரையில் 17 வயது மாணவியை காதலிப்பதாகக்கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 வருகிறாா். இவருக்கு மதுரை அருகே உள்ள திருமோகூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவியை காதலிப்பதாக்கூறி சிறுவன், மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளாா்.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்தப்புகாரின்பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.