மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியில் மாணவா் சோ்க்கை

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் நடத்தப்படும் கடுமையான இயக்கத் திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது
Updated on
1 min read

மதுரை: மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் நடத்தப்படும் கடுமையான இயக்கத் திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது

மதுரை வில்லாபுரத்தில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் இப் பள்ளி நடத்தப்படுகிறது. கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை சோ்த்துக் கொள்ளப்படுவா்.

தங்கும் விடுதி, உணவு, பாடப்புத்தகங்கள், ஆண்டுக்கு நான்கு ஜோடி சீருடை இலவசமாக வழங்கப்படும். மேலும் பிசியோதெரபி பயிற்சியும் அளிக்கப்படும். இப் பள்ளியின் மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள 95430 25483, 73052 90365 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com