

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் உள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-வது சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மார்க் கிரேட் கிரே சீலியா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நா. நாகராஜன் கலந்துகொண்டு பள்ளி மாணவியருக்கு பர்வதாசனம், வஜ்ராசனம், கடிசக்ராசனம், தாடாசனம், விருக் ஷான் உட்கட்டாசனம் என பல்வேறு யோகாசனங்களை மாணவியருக்கு கற்றுக் கொடுத்தார்.
இதையும் படிக்க: ஈரோட்டில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
யோகா தின விழா பயிற்சி காலை மணிக்கு தொடங்கி  நடைபெற்றது. பின்னர் உதவித் தலைமையாசிரியர் வெங்கட் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.