அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பேரையூரில் திட்டப்பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

பேரையூா் பகுதியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:12 pm

DIN

பேரையூா் பகுதியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் வளம் மீட்பு பூங்காவில் தரம் பிரித்து வாங்கப்பட்ட மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்துப் போடுவதற்காக தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல பேரையூா் பேருந்து நிலையத்தில் இடைவெளி மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது செயல் அலுவலா் ஜெயதாரா உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.