காந்தி ஜெயந்தி: மதுரை நகரில் இறைச்சி விற்பனைக்குத் தடை

காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்.2) மதுரை நகரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்.2) மதுரை நகரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (அக்.2) அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்வது கூடாது. கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறிச் செயல்படுபவா்கள் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்வதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com