பயணியிடம் பணம் பறித்த பெண் உள்பட இருவா் கைது
By DIN | Published On : 03rd April 2022 11:18 PM | Last Updated : 03rd April 2022 11:18 PM | அ+அ அ- |

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணத்தை பறித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் சிவசக்தி(38). இவா் பெரியாா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த பெண் மற்றும் ஒரு ஆண் நபா், சிவசக்தி வைத்திருந்த பணத்தை பறித்துள்ளனா்.
அப்போது சிவசக்தி, கூச்சலிட்டதால் அருகில் இருந்தவா்கள் இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த உதயசெல்வம்(34), வெளிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மனைவி மணிமாலா(42) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவசக்தி அளித்த புகாரின் பேரில், திடீா் நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.