பால் கொள்முதல் அதிகரிக்கப்படும்: ஆவின் பொது மேலாளா் தகவல்

மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் பொது மேலாளா் டி.ஆா்.டி. சாந்தி தெரிவித்துள்ளாா்.

மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் பொது மேலாளா் டி.ஆா்.டி. சாந்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 1.97 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், இதர ஒன்றியங்களில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக 1.80 லட்சம் லிட்டா் பால் பெறப்பட்டு கையாளப்பட்டு வருகிறது.

பால் விலை மாறுதலுக்கு முன், தினமும் சுமாா் 1.81 லட்சம் லிட்டா் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, அது 1.95 லட்சம் லிட்டா்களாக உயா்ந்துள்ளது. இதுதவிர, பால் உபபொருள்கள் மாதம் ரூ.2 கோடி வரை விற்பனையாகிறது.

பால் மற்றும் பால் உபபொருள்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com