மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: சீரமைப்புப் பணிகளுக்கு மாநில வல்லுநா் குழு ஒப்புதல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 15 இடங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாநில வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 15 இடங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாநில வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி, கோயிலில் உள்ள வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, 24 மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலில் மேற்கொள்ளப்படவேண்டிய சீரமைப்புப் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்ய, திருப்பணி வல்லுநா் குழு சாா்பில் மாநில வல்லுநா் குழு அமைக்கப்பட்டது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், அறநிலையத் துறை முதன்மைப் பொறியாளா், தொல்லியல் நிபுணா், பாரம்பரிய ஸ்தபதி உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டு, அவா்கள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, கோயிலில் சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி, மகா மண்டபம், நந்தி பலிபீடம், கொடிமரம், விநாயகா் சந்நிதி, நடராஜா் சந்நிதி, பைரவா் சந்நிதி, சண்டிகேசுவரா் சந்நிதி, மடப்பள்ளி, உற்சவா் மண்டபம், நவகிரக மண்டபம் உள்ளிட்ட 15 இடங்களையும் சீரமைக்க, மாநில வல்லுநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியது: கோயிலில் 15 இடங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாநில வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, துறை வாரியான வல்லுநா் குழுக்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வல்லுநா் குழுக்கள் ஒப்புதல் அளித்த பின்னா், பணிகளுக்கான மதிப்பீடு திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அரசு அனுமதி அளித்த பின்னா் பணிகள் தொடங்கப்படும். இதில், கோயிலின் அனைத்துப் பகுதிகளும் முழுமையாக சுத்தம் செய்யப்படும். மேலும், பழுது பாா்ப்பது, வா்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com