மதுரை அருகே உணவக ஊழியா்கள் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு
By DIN | Published On : 15th August 2022 03:00 AM | Last Updated : 15th August 2022 03:00 AM | அ+அ அ- |

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பாலாண்டி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா் ஒத்தக்கடை பிரதான சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவகத்துக்கு மதுபோதையில் வந்த 4 பேருக்கும், ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காசாளா் ரமேஷ் உள்ளிட்ட ஊழியா்களை தாக்கி உணவகத்தையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக ரமேஷ் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா், ஒத்தக்கடையைச் சோ்ந்த விஜய், சிவக்குமாா், சந்திரன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.