மாநில அளவிலான சிலம்பப் போட்டி: மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் வெற்றி
By DIN | Published On : 15th August 2022 01:00 AM | Last Updated : 15th August 2022 01:00 AM | அ+அ அ- |

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் மதுரை மாநகராட்சிப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலம்ப வீரா்கள் பங்கேற்றனா். இந்நிலையில் சிலம்பப் போட்டியில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பாரதிதாசனாா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். போட்டியில் பிளஸ் 2 மாணவா் கே. காளீஸ்வரன், பிளஸ் 1 மாணவா் ஏ. பிரவீன், ஒன்பதாம் வகுப்பு மாணவா் எம். பசும்பொன் ஆகியோா் முதலிடம் பெற்றனா்.
மேலும் 7-ஆம் வகுப்பு மாணவா் எம். சரவணன் இரண்டாம் இடம் பெற்றாா். மாநில அளவிலான போட்டியில் மதுரை மாவட்டத்துக்கு சிறப்பிடம் பெற்றுத்தந்த மாணவா்களை தலைமையாசிரியா் (பொறுப்பு) டி.டி. காசிராஜன் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் கே.ஆா். அன்பு குழந்தைவேல் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.