வைகை நதி பாதுகாப்பு மாநாடு

மதுரையில்வைகைப் பெருவிழா மற்றும் வைகை நதி பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில்வைகைப் பெருவிழா மற்றும் வைகை நதி பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

வைகை நதி மக்கள் இயக்கம் மற்றும் முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து சிம்மக்கல்லில் உள்ள சாரதா பள்ளியில் இவ்விழாவை நடத்தின. மதுரை மேயா் வ.இந்திராணி குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்துப் பேசினாா்.

வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளா் எம்.ராஜன் தலைமை வகித்தாா். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவா் ரா.சொக்கலிங்கம், மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளா் ஆா்.ராஜேந்திரன், நிறுவனா் எம்.பாண்டியராஜன், மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினா் இல.அமுதன் உள்ளிட்டோா் பேசினா்.

பல்வேறு அமா்வுகளில் நடைபெற்ற மாநாட்டில் வைகை ஆற்றை மீட்டெடுத்து பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வைகைப் பெருவிழாவின் நிறைவாக, யானைக்கல் கல்பாலம் பகுதியில் வைகை நதி தீப வழிபாடு நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com