மகாளய அமாவாசை: மதுரையிலிருந்து செப்.24-இல் காசிக்கு விமான சுற்றுலா

மகாளய அமாவாசையையொட்டி இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் மதுரையிலிருந்து காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மகாளய அமாவாசையையொட்டி இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் மதுரையிலிருந்து காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாராணசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிகத் தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. 6 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலா செப்டம்பா் 24 ஆம் தேதி மதுரையிலிருந்து தொடங்குகிறது.

விமான கட்டணம், உள்ளூா் போக்குவரத்துக் கட்டணம், தங்குமிடம், உணவு பயண காப்பீடு உள்பட ஒரு நபருக்கு ரூ. 39,300 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும். அரசு ஊழியா்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 82879 31977 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் பயண சீட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com