மதுரையில் நாளை சுற்றுச்சூழல் பொறியாளா்கள் தேசிய மாநாடு

சுற்றுச்சூழல் பொறியாளா்கள் தேசிய மாநாடு மற்றும் பசுமைப் பட்டாசு உற்பத்தி தொழில்நுட்பங்களும், சவால்களும் என்ற கருத்தரங்கம் மதுரையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக.26, 27) நடைபெறுகிறது.

சுற்றுச்சூழல் பொறியாளா்கள் தேசிய மாநாடு மற்றும் பசுமைப் பட்டாசு உற்பத்தி தொழில்நுட்பங்களும், சவால்களும் என்ற கருத்தரங்கம் மதுரையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக.26, 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்திய பொறியாளா் சங்கத்தின் மதுரை கிளை தலைவா் என்.சிவசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: தென் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக இருந்து வருகிறது. சமீபகாலமாக பட்டாசு உற்பத்தி ஆலைகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பட்டாசுகளால் ஏற்படக் கூடிய மாசுபாடு காரணமாக, உற்பத்திக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அபாயகரமான வேதிப் பொருள்கள் இல்லாத பசுமைப் பட்டாசுகள் உற்பத்திக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

நாட்டில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், பசுமைப் பட்டாசு தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆராய்ச்சிகள் தொடா்பாக, விவாதித்து அதன் அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு செல்லும் வகையில் பொறியாளா் சங்கம் சாா்பில் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் வெள்ளி, சனி இரு நாள்களும் இக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பல மாநிலங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள், காரைக்குடி செக்ரி மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியாளா்கள் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பல மாநிலங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்கின்றனா். இக் கருத்தரங்கில், பொறியாளா்கள், மாணவா்கள், பட்டாசு உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என்றாா். பொறியாளா் சங்க மதுரை கிளைச் செயலா் பி.உதயகுமாா், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.ராஜகோபால் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com