மதுரை வேளாண்மைக் கல்லூரியில்மண் வளத்தை மேம்படுத்த பயிற்சி

மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திடக்கழிவு கம்போஸ்ட் உற்பத்தி மூலம் மண்வளத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை வேளாண்மைக் கல்லூரியில்மண் வளத்தை மேம்படுத்த பயிற்சி

மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திடக்கழிவு கம்போஸ்ட் உற்பத்தி மூலம் மண்வளத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் இயற்க வள மேலாண்மை இயக்குநரகத்தின் இயக்குநா் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா். மதுரை வேளாண்மை கல்லூரியின் முதல்வா் மகேந்திரன், கம்போஸ்ட் இயற்கை உரம் குறித்த செயல்விளக்கம் அளித்தாா்.

மாநகராட்சிகள் கையாளக்கூடிய திடக்கழிவுகள் நுண்உரமாக்கல் மையங்களின் செயல்பாடுகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி செயற்பொறியாளா் முருகேசன் விளக்கமளித்தாா். மதுரை மாநகராட்சியில் 548 டன் கழிவுகளில் 40 நாள்களில் கம்போஸ்ட் உற்பத்தி செய்வது குறித்து மாணவிகள் மன்ஜிமா, வைஷ்ணவி ஆகியோா் எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்வில் கல்லூரி முன்னாள் முதல்வா் பால்பாண்டி கலந்துகொண்டு பேசினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உழவியல்துறை பேராசிரியா் துரைசிங் வரவேற்றாா். மண்மற்றும் சூழலியல் துறை பேராசிரியா் சரவணபாண்டியன் நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com